Saturday, June 29, 2019

உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுப்பதன் அவசியம் என்ன ?

June 29, 2019 Posted by doctortamil No comments

நோய்த்தடுப்பு எவ்வாறு செயல்படுகிறது?
                 உங்கள் குழந்தைக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி, நோய் கிருமியின் (பாக்டீரியம் அல்லது வைரஸ்) இறந்த அல்லது பலவீன வடிவத்தின் சிறிய அளவு அல்லது கிருமியால் உருவாக்கப்பட்ட ஒரு நச்சு ஆகும். இது செயலற்ற நிலையில் இருப்பதால், அது தொற்றுநோயை ஏற்படுத்தாது. இருப்பினும் உடல், இந்த கிருமி அல்லது நச்சுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை - ஆன்டிபாடிகள் மற்றும் / அல்லது வெள்ளை இரத்த அணுக்களை (நோயெதிர்ப்பு செல்கள்) உருவாக்குகிறது.

                நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், குறிப்பிட்ட ஆன்டிபாடிகள் மற்றும் / அல்லது நோயெதிர்ப்பு செல்கள் நமக்கு குறிப்பிட்ட கிருமி தொற்றுமாயின் அதைத் தாக்க தயாராக இருக்கும்.
                உதாரணமாக சிறுவயதில் கொப்புளிப்பான் (வரிசெல்லா) ஏற்படுமாயின், பிற்காலத்தில் கொப்புளிப்பான் வர வாய்புகள் குறைவு. ஏனினில் ஒரு தடவை கொப்புளிப்பான் வந்தால் குறிபிட்ட வைரஸ்சுக்கு எதிராக ஆன்டிபாடிகள் உருவாகும் இது மீண்டும் இந்த வைரஸ் தாக்கும் போது குறிபிட்ட கிருமிகள் நம் உடலை பாதிக்காதவாறு அவற்றை தாக்குகின்றன.
                 தடுப்பூசிகள் தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் பெர்டுசிஸ் (கக்குவான் இருமல்) உள்ளிட்ட நோய்களைத் தடுக்கின்றன. இந்த நோய்கள் கடுமையான உடல் பாதிப்புக்களை ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும்.

உதாரணமாக,
  • பேர்டூஸிஸ் நோய் சிறு குழந்தைகளுக்கு நியூமோனியா, சுவாசம் நின்றுபோதல், வலிப்பு, மற்றும் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.
  • தட்டம்மை தொற்றுநோயுள்ள சில பிள்ளைகளுக்கு காதுத் தொற்றுநோய், வயிற்றுப்போக்கு, அல்லது மார்பு சளிக்காய்ச்சல் கூட ஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பிள்ளைகளுக்கு மூளையழற்சி என அழைக்கப்படும் மூளையில் வீக்கமும் ஏற்படும். கடுமையான நிலைமைகளில் மூளையழற்சி, மூளையில் சேதத்தை அல்லது மரணத்தை விளைவிக்கலாம். 
  • கூகைக்கட்டு நோய் மிகவும் கடுமையானதாக சில வேளைகளில் முதுகுத் தண்டு-மூளை வீக்கம், காதுகளிலும் செவிட்டுத்தன்மை, விரையில் வீக்கம், கணைய அழற்சி என்பவற்றையும் ஏற்படுத்தலாம். 
  • முதுகுத் தண்டு-மூளை வீக்கம் – ஒரு சில பக்டீரியாவால் அல்லது வைரசால் ஏற்படுகின்றது. உடனடியாகச் சிகிச்சையளிக்காவிட்டால், கேள்விக் குறைபாடு, கால்-கை வலிப்பு, மண்டை வீக்கம் (hydrocephalus), உணரறிவியக் குறைபாடுகள் (cognitive deficits) போன்ற கடுமையான நெடுங்கால விளைவுகள் மூளையுறை அழற்சியினால் ஏற்படுகின்றன 
சில பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களுக்கு தடுப்பூசி தயாரிப்பது கடினம்; இருப்பினும், தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது, மேலும் புதிய தடுப்பூசிகள் எதிர்காலத்தில் கிடைக்கலாம்.
பொதுவான பக்க விளைவுகள்
             தடுப்பூசி போட்ட இடத்தை சுற்றி சிவத்தல் அல்லது வீக்கம் ஏற்படலாம் இது, மிகவும் சாதரணமானது , இது விரைவில் நீங்கும்.

            இளைய குழந்தைகள் அல்லது குழந்தைகள் சற்று எரிச்சலுடன், உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம், அல்லது லேசான காய்ச்சல் இருக்கலாம். இது பொதுவாக 1 அல்லது 2 நாட்களுக்குள் போய்விடும்.

தடுப்பூசி பற்றிய உண்மைகள்
  • குழந்தைகளுக்கு, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது தடுப்பூசி போட வேண்டாம். உங்கள் பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மற்றும் அதிக காய்ச்சல் இருந்தால் தடுப்பூசி போடுவதை ஒத்திவைக்க வேண்டும் 
  • குழந்தைகளுக்கு ஒவ்வாமை இருந்தால் தடுப்பூசி போட வேண்டாம். குறிப்பிட்ட முந்தைய தடுப்பூசிக்கு அல்லது அதில் உள்ள மூலப்பொருளுக்கு உங்கள் குழந்தைக்கு கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டு இருந்தால் (அனாபிலாக்டிக் எதிர்வினை) இருந்திருந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட தடுப்பூசி கொடுக்க வேண்டாம். 
  • பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் "உயிருள்ள" தடுப்பூசி கொடுக்க வேண்டாம் . "உயிருள்ள" தடுப்பூசிகள் பலவீனமான வடிவத்தில் இருந்தாலும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.  உதாரணமாக உங்கள் பிள்ளைக்கு பி.சி.ஜி (காசநோய் தடுப்பூசி) அல்லது எம்.எம்.ஆர் போன்ற தடுப்பூசிகள் கொடுக்க கூடாது. 
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணிகள்
  • உங்கள் பிள்ளை அதிக அளவு ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்து கொண்டு இருந்தால், 
  • புற்றுநோய்க்கு கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை மூலம் சிகிச்சை பெறுகிறார்கள், 
  • உங்கள் பிள்ளைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது அல்லது நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளில் இருந்தால் (immunosuppressants) 
தடுப்பூசி கட்டுக்கதைகள்
  • இருமல் அல்லது சளி போன்ற லேசான நோய்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் தடுப்பூசிகளை தவிர்ப்பது, அவர்களுக்கு ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை நோய்கள் இருப்பின் தவிர்க்க வேண்டும் என்பது கட்டுகதை.
  • உங்கள் குழந்தை, குறை மாதத்தில் பிறந்து இருந்தால் தடுப்பூசிகள் தவிர்க்க அல்லது தாமதிக்க வேண்டும் என்பது ஒரு கட்டுக்கதை. 
  • தடுப்பூசிகள் குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பை அதிக சுமைக்கு உட்படுத்தும் என்பது கட்டுக்கதை. உண்மையில், உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பை ஒரு சிறிய பகுதியே குழந்தை பருவ தடுப்பூசிகளால் பயன்படுத்தப்படுகிறது. 
  • கடுமையான தொற்றுநோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க தடுப்பூசிகளுக்கு மாற்றாக ஹோமியோபதி பயன்படுத்தப்படலாம் என்பது ஒரு கட்டுக்கதை. உண்மையில், ஹோமியோபதி குழந்தைகளை நோய் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 
 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாவிட்டால் நோய் தொற்று ஏற்படுவது மட்டும் இல்லாமல் பரவவும் வாய்ப்புள்ளது.





Wednesday, June 26, 2019

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்

June 26, 2019 Posted by doctortamil No comments



குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்

                      உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்போது காய்ச்சல் ஏற்படுகிறது. சாதரணமாக உடல் வெப்பநிலை கொஞ்சம் மாறுபடும், எனினும் 38 ° C (100.4F) க்கு மேல் வெப்பநிலை காய்ச்சலாகக் கருதப்படுகிறது.

               சிறு குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது, ​​பெற்றோருக்கு ஏன் ஏற்படுகின்றது என கண்டறிவது கடினம்..

குழந்தைகளுக்கு ஏன் காய்ச்சல் வருகிறது?

             நமது சாதாரண உடல் வெப்பநிலை சுமார் 36.4 ° C ஆகும். நாள் முழுவதும் உடல் வெப்பநிலை இந்த எண்ணிக்கையைச் சுற்றி சிறிது மேலே/கீழே செல்லலாம். சூடான குளியல், உடற்பயிற்சி மற்றும் அதிக சூடான ஆடைகளை அணிவது போன்றவற்றால் குழந்தைகளின் வெப்பநிலை எளிதில் சற்று உயரக்கூடும். பல்முளைக்கும் போதும் குழந்தையின் வெப்பநிலையை 0.5 C வரை அதிகரிக்கலாம்.

            நோய் தொற்று கிருமிகள் சாதாரண உடல் வெப்பநிலையில் நன்றாக பெருகும். காய்ச்சல் என்பது நோய்த்தொற்றுக்கு எதிராக உடலின் இயற்கையாக அமைக்கப்பெற்ற பாதுக்கமைப்பின் ஒரு பகுதியாகும்.

காய்ச்சல் / அதிக வெப்பநிலையை ஏற்படுத்துவது எது?

            குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான பொதுவான காரணம் வைரஸ் தொற்றுகள். எனினும் இன்னும் பல காரணங்கள் உள்ளன.

  • வைரஸ் கிருமிகளினால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மிகவும் பொதுவானவை. வைரஸ் கிருமிகள் சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற பல பொதுவான நோய்களை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் வைரஸ் தொற்றுகள் மிகவும் கடுமையான நோய்களையும் ஏற்படுத்துகின்றன.
  • பாக்டீரியா எனப்படும் கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் வைரஸ் தொற்றுநோய்களைக் காட்டிலும் குறைவாகவே. நிமோனியா, மூட்டு நோய்த்தொற்றுகள் ( செப்டிக் ஆர்த்ரிடிஸ் ), சிறுநீர் தொற்று, சிறுநீரக நோய்த்தொற்றுகள், மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. இருப்பினும், காது நோய்த்தொற்று, தொண்டை நோய் தொற்று, போன்ற தீவிரமற்ற நோய்த்தொற்றுகளிளாலும் பாக்டீரியாகள் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.
  • நோய்த்தடுப்பு ஊசி மருந்துகள்: பொதுவாக நோய்த்தடுப்பு மருந்துகள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை “ஏமாற்றி” நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வண்ணம் வடிவமைக்கபட்டவை. நோய்த்தடுப்பு ஊசி மருந்துகளைத் தொடர்ந்து வரும் காய்ச்சல்கள் பொதுவாக அதிகமாகவோ அல்லது நீடித்ததாகவோ இருக்காது.
  • பிற வகை நோய்த்தொற்றுகள் : இவற்றில் மலேரியா மற்றும் டெங்கு போன்ற 'வெப்பமண்டல' நோய்த்தொற்றுகள் அடங்கும்.


குழந்தைகளில் காய்ச்சல் எவ்வளவு பொதுவானது?

         சிறு குழந்தைகளில் காய்ச்சல் பொதுவானது, குறிப்பாக 5 வயதுக்கு குறைந்தவர்களுக்கு காய்ச்சல் மிகவும் பொதுவானது. இது பெற்றோருக்கு மிகவும் கவலை அளிக்க கூடியது ஒன்று. உங்கள் பிள்ளைகள் எவ்வளவு நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் , எப்போது மருத்துவ உதவி நாட வேண்டும் என்று தீர்மானிப்பது எப்போதும் எளிதல்ல. எது சாதாரணம் என்று உங்கள் பிள்ளையை பற்றி மற்றவைகளை விட நீங்கள் நன்கு அறிவீர்கள் - அவர்களின் வெப்பநிலையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்

காய்ச்சலை எவ்வாறு குணப்படுத்துவது ?

செய்ய வேண்டியவை:

  1. அவர்களுக்கு போதுமான அளவு திரவங்களைக் கொடுங்கள்
  2. நீரிழப்பு அறிகுறிகளைப் பாருங்கள் - சோர்வு , வறண்ட/காய்ந்த வாய் அல்லது நாக்கு, அழும்போது கண்ணீர் இல்லை, மூழ்கிய கண்கள்.
  3. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு உணவு கொடுங்கள்
  4. இரவில் உங்கள் குழந்தையை அடிக்கடி தவறாமல் பாருங்கள்
  5. அவர்க்களை வீட்டில் வைத்து கவனித்து கொள்ளுங்கள்
  6. அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அல்லது எரிச்சலுடன் இருந்தால் அவர்களுக்கு பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் கொடுங்கள்


செய்ய கூடாதவை:
  1. உங்கள் குழந்தையை குளிர்விக்கும் நோக்கில் உடைகளை களைவதோ அல்லது ஈர துணியில் கழுவுவதோ செய்யாதீர்கள் - காய்ச்சல் என்பது தொற்றுநோய்க்க்கு எதிரான இயற்கையாக மற்றும் ஆரோக்கியமான அமைக்கப்பெற்ற உடல் பாதுகாமைப்பின் ஒரு பகுதியாகும்.
  2. அதே சமயம் அதிக உடைகள் / துணிகள் கொண்டு சுற்றுவதும் வேண்டாம்
  3. 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின்(Asprin) கொடுக்க வேண்டாம்
  4. இப்யூபுரூஃபன் (ibuprofen) மற்றும் பாராசிட்டமால் paracetamol ஆகியவற்றை ஒரே தடைவையில் கொடுக்க வேண்டாம்.
  5. 2 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு பாராசிட்டமால் (paracetamol) கொடுக்க வேண்டாம். உடனை மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
  6. 3 மாதங்களுக்கு கீழ் அல்லது 5 கிலோவுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு இப்யூபுரூஃபன் (ibuprofen) கொடுக்க வேண்டாம்
  7. ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு இப்யூபுரூஃபன் ((ibuprofen) கொடுக்க வேண்டாம்
எப்பொழுது உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?
  1. உங்கள் குழந்தை 3 மாதங்களுக்கும் குறைவாக மற்றும் அவர்களுக்கு காய்ச்சல் 38c (101F) அல்லது அதற்கு மேற்பட்டதாக இருப்பின்
  2. உங்கள் குழந்தை 3 முதல் 6 மாதங்கள் மற்றும் காச்சல் 39 C (102F)அல்லது அதற்கு மேற்பட்டதாக இருப்பின்
  3. சாப்பிட விரும்பவில்லை, அவர்களின் வழக்கமான நிலையில் இல்லை, அல்லது நீங்கள் கவலைப்படுகிறீர்கள்,
  4. பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் கொடுத்தான் குறையாத காச்சல்,
  5. நீரிழப்பின் அறிகுறிகள் இருப்பின் –வறண்ட/காய்ந்த வாய் அல்லது நாக்கு, அழும்போது கண்ணீர் இல்லை, மூழ்கிய கண்கள், சோர்வு, குறைந்த நப்பீஸ் (nappies)
  6. அதிக காய்ச்சலுடன் வேறு அறிகுறிகள் இருப்பின் வேகமாக சுவாசிப்பது, தோல் தடிப்பு ...
  7. காய்ச்சலுடன் முதல் தடவை வலிப்பு ஏற்ப்பட்டால்.
  8. 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்,






#ferver in Childen