குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்
உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்போது காய்ச்சல் ஏற்படுகிறது. சாதரணமாக உடல் வெப்பநிலை கொஞ்சம் மாறுபடும், எனினும் 38 ° C (100.4F) க்கு மேல் வெப்பநிலை காய்ச்சலாகக் கருதப்படுகிறது.
சிறு குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது, பெற்றோருக்கு ஏன் ஏற்படுகின்றது என கண்டறிவது கடினம்..
குழந்தைகளுக்கு ஏன் காய்ச்சல் வருகிறது?
நமது சாதாரண உடல் வெப்பநிலை சுமார் 36.4 ° C ஆகும். நாள் முழுவதும் உடல் வெப்பநிலை இந்த எண்ணிக்கையைச் சுற்றி சிறிது மேலே/கீழே செல்லலாம். சூடான குளியல், உடற்பயிற்சி மற்றும் அதிக சூடான ஆடைகளை அணிவது போன்றவற்றால் குழந்தைகளின் வெப்பநிலை எளிதில் சற்று உயரக்கூடும். பல்முளைக்கும் போதும் குழந்தையின் வெப்பநிலையை 0.5 C வரை அதிகரிக்கலாம்.
நோய் தொற்று கிருமிகள் சாதாரண உடல் வெப்பநிலையில் நன்றாக பெருகும். காய்ச்சல் என்பது நோய்த்தொற்றுக்கு எதிராக உடலின் இயற்கையாக அமைக்கப்பெற்ற பாதுக்கமைப்பின் ஒரு பகுதியாகும்.
காய்ச்சல் / அதிக வெப்பநிலையை ஏற்படுத்துவது எது?
குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான பொதுவான காரணம் வைரஸ் தொற்றுகள். எனினும் இன்னும் பல காரணங்கள் உள்ளன.
- வைரஸ் கிருமிகளினால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மிகவும் பொதுவானவை. வைரஸ் கிருமிகள் சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற பல பொதுவான நோய்களை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் வைரஸ் தொற்றுகள் மிகவும் கடுமையான நோய்களையும் ஏற்படுத்துகின்றன.
- பாக்டீரியா எனப்படும் கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் வைரஸ் தொற்றுநோய்களைக் காட்டிலும் குறைவாகவே. நிமோனியா, மூட்டு நோய்த்தொற்றுகள் ( செப்டிக் ஆர்த்ரிடிஸ் ), சிறுநீர் தொற்று, சிறுநீரக நோய்த்தொற்றுகள், மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. இருப்பினும், காது நோய்த்தொற்று, தொண்டை நோய் தொற்று, போன்ற தீவிரமற்ற நோய்த்தொற்றுகளிளாலும் பாக்டீரியாகள் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.
- நோய்த்தடுப்பு ஊசி மருந்துகள்: பொதுவாக நோய்த்தடுப்பு மருந்துகள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை “ஏமாற்றி” நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வண்ணம் வடிவமைக்கபட்டவை. நோய்த்தடுப்பு ஊசி மருந்துகளைத் தொடர்ந்து வரும் காய்ச்சல்கள் பொதுவாக அதிகமாகவோ அல்லது நீடித்ததாகவோ இருக்காது.
- பிற வகை நோய்த்தொற்றுகள் : இவற்றில் மலேரியா மற்றும் டெங்கு போன்ற 'வெப்பமண்டல' நோய்த்தொற்றுகள் அடங்கும்.
குழந்தைகளில் காய்ச்சல் எவ்வளவு பொதுவானது?
சிறு குழந்தைகளில் காய்ச்சல் பொதுவானது, குறிப்பாக 5 வயதுக்கு குறைந்தவர்களுக்கு காய்ச்சல் மிகவும் பொதுவானது. இது பெற்றோருக்கு மிகவும் கவலை அளிக்க கூடியது ஒன்று. உங்கள் பிள்ளைகள் எவ்வளவு நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் , எப்போது மருத்துவ உதவி நாட வேண்டும் என்று தீர்மானிப்பது எப்போதும் எளிதல்ல. எது சாதாரணம் என்று உங்கள் பிள்ளையை பற்றி மற்றவைகளை விட நீங்கள் நன்கு அறிவீர்கள் - அவர்களின் வெப்பநிலையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்
காய்ச்சலை எவ்வாறு குணப்படுத்துவது ?
செய்ய வேண்டியவை:
- அவர்களுக்கு போதுமான அளவு திரவங்களைக் கொடுங்கள்
- நீரிழப்பு அறிகுறிகளைப் பாருங்கள் - சோர்வு , வறண்ட/காய்ந்த வாய் அல்லது நாக்கு, அழும்போது கண்ணீர் இல்லை, மூழ்கிய கண்கள்.
- அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு உணவு கொடுங்கள்
- இரவில் உங்கள் குழந்தையை அடிக்கடி தவறாமல் பாருங்கள்
- அவர்க்களை வீட்டில் வைத்து கவனித்து கொள்ளுங்கள்
- அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அல்லது எரிச்சலுடன் இருந்தால் அவர்களுக்கு பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் கொடுங்கள்
செய்ய கூடாதவை:
- உங்கள் குழந்தையை குளிர்விக்கும் நோக்கில் உடைகளை களைவதோ அல்லது ஈர துணியில் கழுவுவதோ செய்யாதீர்கள் - காய்ச்சல் என்பது தொற்றுநோய்க்க்கு எதிரான இயற்கையாக மற்றும் ஆரோக்கியமான அமைக்கப்பெற்ற உடல் பாதுகாமைப்பின் ஒரு பகுதியாகும்.
- அதே சமயம் அதிக உடைகள் / துணிகள் கொண்டு சுற்றுவதும் வேண்டாம்
- 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின்(Asprin) கொடுக்க வேண்டாம்
- இப்யூபுரூஃபன் (ibuprofen) மற்றும் பாராசிட்டமால் paracetamol ஆகியவற்றை ஒரே தடைவையில் கொடுக்க வேண்டாம்.
- 2 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு பாராசிட்டமால் (paracetamol) கொடுக்க வேண்டாம். உடனை மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
- 3 மாதங்களுக்கு கீழ் அல்லது 5 கிலோவுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு இப்யூபுரூஃபன் (ibuprofen) கொடுக்க வேண்டாம்
- ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு இப்யூபுரூஃபன் ((ibuprofen) கொடுக்க வேண்டாம்
- உங்கள் குழந்தை 3 மாதங்களுக்கும் குறைவாக மற்றும் அவர்களுக்கு காய்ச்சல் 38c (101F) அல்லது அதற்கு மேற்பட்டதாக இருப்பின்
- உங்கள் குழந்தை 3 முதல் 6 மாதங்கள் மற்றும் காச்சல் 39 C (102F)அல்லது அதற்கு மேற்பட்டதாக இருப்பின்
- சாப்பிட விரும்பவில்லை, அவர்களின் வழக்கமான நிலையில் இல்லை, அல்லது நீங்கள் கவலைப்படுகிறீர்கள்,
- பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் கொடுத்தான் குறையாத காச்சல்,
- நீரிழப்பின் அறிகுறிகள் இருப்பின் –வறண்ட/காய்ந்த வாய் அல்லது நாக்கு, அழும்போது கண்ணீர் இல்லை, மூழ்கிய கண்கள், சோர்வு, குறைந்த நப்பீஸ் (nappies)
- அதிக காய்ச்சலுடன் வேறு அறிகுறிகள் இருப்பின் வேகமாக சுவாசிப்பது, தோல் தடிப்பு ...
- காய்ச்சலுடன் முதல் தடவை வலிப்பு ஏற்ப்பட்டால்.
- 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்,
#ferver in Childen
No comments